பிரிவாற்றாமை
அன்பு, அழகு, உன் இதயம், காதல்..,
புன்னகை, இனிமை, உன் இதழ்கள், முத்தம்..,
தனிமை, தவிப்பு, உன் நினைவு, ஏக்கம்..,
காதல்.., முத்தம்.., ஏக்கம்.., பிரிவாற்றாமை..!
அழகீர்ப்புவிசை
மீண்டும் மரித்திட . . .
உறங்காமல் இருக்கும் நேரம்
கண்ட கனவொன்றில் மரணம்
சம்பவிப்பதுபோல் உணர்ந்தேன்..,
நினைவில் நில்லாத அக்கணம்
என் மனதின்று மறைய வாசல்
தேடி அழைந்திட உனர்ந்தேன்..,
இரக்கம் துளியும் இல்லாமல்
அந்த அழகிய அரக்கி என்
இதயத்தை பார்வையால் பிடுங்கியதை..!
ஜனரஞ்சக காதலி
நிலவிற்கு சுவடு அழகென்றால்
அவள் முகத்தில் அதுவும்
இல்லை என்றோ அழகிய
நெற்றியில் வட்டமாய் இட்ட
சாந்து வழுக்கி தெரிந்து
பற்றி தொங்கி காய்ந்தது
சொட்டும் நீர்போல் இருளாய்
எழுதிய கண்மையும் அவளின
கயல்களை ஒத்ததாய் இருக்கும்
கண்களில் இருக்க வெட்கம்
அடைந்து சிவந்திட கண்டு
இதுவரை தான்தான் அழகென
என்னி மேட்டிமையுடன் ஆடி
தொங்கிய கம்மலும் நானி
தலை கவிழ்ந்திட அதை
ஏழனம் செய்து கைவளைகள்
சிரித்தது அவள் தன்
கூந்தலை கோதிட அதில்
சிக்கி களைந்தது என் மனம்
[உரையாடல் கவிதை போட்டிக்காக]
எனக்கான தேடல்
பிடித்திருந்தும்
எனக்கான உன்னை
நீ தர மறுப்பதால்..,
எனக்கான என்னை
கொன்று உனக்கான
என்னை தேடிச் செல்கிறேன் . . !
ஒப்புமை
உயிர் தோழியின் திருமணம் சென்றேன்,
என் காதலி உடன்…
என்னை விரும்பியவளின் முகம் பார்த்த மணமகளின் அன்னை,
அவள் தன மகளின் சாயலென கூறிட..,
மெல்லிய புன்னகையுடன் அவள் சிரிப்பை கண்ட மணமகன்,
தன் மனைவியின் புன்னகையுடன் அதை ஒப்பிட..,
வியப்புடன் எங்களைப் பார்த்த மணமகள்,
நீ நினைத்தது நடந்துவிட்டதா என்று வினவிட…
என் தோழியை போன்றே எனக்கொரு மனைவி தர
நான் விளையாட்டாய் கடவுளை வேண்டியது
என் நினைவில் தோன்றியது…
மழைக்காற்று
சிந்தித்திருக்கிறேன், எழுதியதில்லை இதுவரை..!
சிந்தனையை எழுதி இருக்கிறேன் முதல் முறை..!
உங்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் இதன் குறை, நிறை..!
மாலை நேரம், கையில் தேனீர் குவளையுடன்
தங்கி இருக்கும் அறையின் வெளியே அமர்ந்தேன்..,
அருகில் இருக்கும் பெண்கள் கல்லூரி முடியும் நேரம்…
மெல்லிய காற்றுடன் மண்வாசனை..,
ஏனோ மழைவருமென ஒரு எண்ணம்..,
ஆனால் வானிலையோ அப்படி இல்லை…
லேசாக தூறுவது போல
ஒரு அழகிய பெண் தொலைவில் வந்தாள்..,
பார்த்துக்கொண்டே இருந்தேன்…
மெதுவாய் மழை பொழிய தொடங்கியது
அவள் பார்வை என் பக்கம் திரும்பிய போது…
சிறிது நேரம் தான்.., ஆனால் கனமழை..,
என்னை முழுவதும் நனைத்த மழை
ஏனோ இரு நிமிடங்களிலேயே நின்றது..,
அவள் அந்த வீதியை கடந்து சென்றுவிட்டாள்..
முழுவதும் நனைந்தும்
முகம் துடைக்க மனமில்லை…
வாரத்தின் இரு விடுமுறை நாட்களும்
மழையில் நனைந்த தாக்கம்தான்…
மழையில் நனைந்து உடல்நலம் குறைபோல
நானும் அவதிப்பட்டேன்..,
ஆனால் என் உடலுக்கு ஒன்றுமில்லை…
திங்கள் காலைதான் கொஞ்சம் தெளிந்தேன்..,
அலுவலகம் செல்ல தயாராகி
வீட்டின் வெளிய வந்து நிற்க
வீசியது மீண்டும் மண்வாசனை மெதுவாக..!!!
முதல் பதிவு

தமிழரின் பண்பிலேயே தலயாய பண்பு விருந்தோம்பல்… எனது வலைப்பக்கத்திற்கு வந்திருக்கும் உங்களை எனது விருந்தினராகவே பாவிக்கிறேன்…
வந்தமைக்கு நன்றி.., இது தன்னிலவனின் வணக்கம்…
அறிமுகமில்லாமல் போனால் நான் அந்நியனாக போய்விடுவேன்..,
நான், தன்னிலவன், முதுகலை பட்டதாரி கணிப்பொறி அறிவியலில்…
ஆங்கிலம் பேசுவதுதான் என் பணி…
நானும் தமிழன் என்று கூறுவதற்க்கு இங்கு வரவில்லை..,
நான் திராவிடன், தமிழ் காதலன் என்று பறை சாற்றவே..












