மழைக்காற்று

சிந்தித்திருக்கிறேன், எழுதியதில்லை இதுவரை..!
சிந்தனையை எழுதி இருக்கிறேன் முதல் முறை..!
உங்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள் இதன் குறை, நிறை..!

மழைகாற்று

மாலை நேரம், கையில் தேனீர் குவளையுடன்
தங்கி இருக்கும் அறையின் வெளியே அமர்ந்தேன்..,
அருகில் இருக்கும் பெண்கள் கல்லூரி முடியும் நேரம்…
மெல்லிய காற்றுடன் மண்வாசனை..,
ஏனோ மழைவருமென ஒரு எண்ணம்..,
ஆனால் வானிலையோ அப்படி இல்லை…
லேசாக தூறுவது போல
ஒரு அழகிய பெண் தொலைவில் வந்தாள்..,
பார்த்துக்கொண்டே இருந்தேன்…
மெதுவாய் மழை பொழிய தொடங்கியது
அவள் பார்வை என் பக்கம் திரும்பிய போது…
சிறிது நேரம் தான்.., ஆனால் கனமழை..,
என்னை முழுவதும் நனைத்த மழை
ஏனோ இரு நிமிடங்களிலேயே நின்றது..,
அவள் அந்த வீதியை கடந்து சென்றுவிட்டாள்..
முழுவதும் நனைந்தும்
முகம் துடைக்க மனமில்லை…
வாரத்தின் இரு விடுமுறை நாட்களும்
மழையில் நனைந்த தாக்கம்தான்…
மழையில் நனைந்து உடல்நலம் குறைபோல
நானும் அவதிப்பட்டேன்..,
ஆனால் என் உடலுக்கு ஒன்றுமில்லை…
திங்கள் காலைதான் கொஞ்சம் தெளிந்தேன்..,
அலுவலகம் செல்ல தயாராகி
வீட்டின் வெளிய வந்து நிற்க
வீசியது மீண்டும் மண்வாசனை மெதுவாக..!!!

  1. Princess
    06:09 இல் அக்டோபர் 23, 2009 | #1

    Hey BB,

    super… nee ipadi yelam yeluthuvanu enaku theriyathu…
    kalakura po… bt pure tamila.., konjam read pana kashtama iruku…

  2. Enemy
    11:24 இல் அக்டோபர் 23, 2009 | #3

    Hey enemy,your first blog about “AM I THERE IN YOUR HEART” is exaggeration and now “MAZHAI KAATRU” is imagination.Its difficult for me too leave a comment in tamizh.Hey enemy,this post is realy awesome.It will make the person to think about their loved ones when they read this.Its cool.
    Congrats enemy.good going……..
    Hope to see more post by you.

    • 12:19 இல் அக்டோபர் 23, 2009 | #4

      நன்றி Enemy தங்கள் பின்னூட்டத்திர்க்கு.., இது எனக்கு ஒரு நல்ல ஊக்கம்… இங்கு எனது ஆங்கில வலைப்பக்கம் Chauvinist‘ஐ நினைவு கூரியது மகிழ்ச்சி…

  3. Ganapathy
    10:10 இல் அக்டோபர் 24, 2009 | #5

    Hey bigben, Nice post, happy to read in tamil. Bennett kulla ipdi oru singam thoongitu erundirukea, adadea achriya kuri!!
    Nice man really good, hope to see more posts,keep rocking.

    • 15:35 இல் அக்டோபர் 24, 2009 | #6

      நன்றி கணபதி..,
      தங்கள் ஊக்கம அழிக்கும் மறுமொழிக்கு.,
      நிச்சயம் பதிவுகள் இடுவேன், தொடர்ந்து இணைந்திருப்போம்

  4. சுரேஷ்
    19:41 இல் அக்டோபர் 27, 2009 | #7

    அருமையான படைப்பு!!!!!…… படிக்க படிக்க சுவாரஸ்யம்…
    பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

  5. Balaji C
    22:50 இல் அக்டோபர் 27, 2009 | #9

    Hi thannilavan, good initiative… I have already given my comments through email… let it be…
    Keep going… I like the wordings as well as the photo which you have put for ‘MAZHAI KAATRU’…
    வாழ்த்துக்கள்…

    இப்படிக்கு உன் நண்பன்
    பாலாஜி

    • 13:13 இல் அக்டோபர் 28, 2009 | #10

      நண்ரே பாலாஜி..,
      உங்கள் மின்னஞ்சலை பார்த்தேன்.., மடலிலும்,உங்கள் மறுமொழியிலும் நீங்கள் தந்துள்ள ஊக்கத்திர்க்கு நன்றிகள்…

  6. Mr.BurningIce
    14:23 இல் அக்டோபர் 28, 2009 | #11

    Realy excellent….Sondhama eludhunadhunu nambaradukku konjam kastamathan erukku…. But nambama erukkuradukku romba kastama erukku…..

    • 14:51 இல் அக்டோபர் 28, 2009 | #12

      வாங்க எரிர ஐஸ் கட்டி(Mr. BurningIce),
      மொத தடவ வந்ததுக்கு, கருத்து சொன்னதுக்கு நன்றி கண்ணு..
      ஏணுங்க உங்கட வேடிக்கையான பேச்ச இங்கயு காட்டிப்போட்டீங்க பாத்தீங்களா???

  7. Subha
    15:25 இல் அக்டோபர் 29, 2009 | #13

    HI BENS..தங்களின் இந்த பதிவு தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.